இந்திய மாணவர்கள் அதிகம் செல்லக்கூடிய, சில முக்கிய நாடுகளில், எந்தெந்த
காலகட்டங்களில், விண்ணப்பம், விசா செயல்பாடுகள் மற்றும் வகுப்புகள்
தொடங்குகின்றன என்பதன் சுருக்கமான விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அமெரிக்கா
12 முதல் 18 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
பிப்ரவரி இறுதியில், விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.
மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைபட்ட காலகட்டத்தில், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
விசா சுழற்சி: I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 120 நாளுக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பயணத்தை தொடங்கலாம்.
வகுப்புகள் தொடக்கம் - செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
பிரிட்டன்
படிப்பில் சேர்வதற்கு முந்தைய ஆண்டின் அக்டோபரில் விண்ணப்ப செயல்பாடு தொடங்கும்.
பொதுவாக மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடு முடிந்துவிட்டாலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜுன் வரை நீட்டிப்பு வழங்கப்படும்.
விசா சுழற்சி - செமஸ்டர் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
ஆஸ்திரேலியா
பிப்ரவரியில் தொடங்கும் விண்ணப்ப செயல்பாடு, டிசம்பரில் முடிவடையும்.
நவம்பர் தொடங்கி, ஜனவரி மாதத்திற்குள், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை கல்வி நிறுவனங்கள் அறிவித்துவிடும்.
விசா செயல்பாடு அக்டோபரில் துவங்கி, டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிந்துவிடும்.
பொதுவாக, பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கினாலும், பல்கலையைப் பொறுத்து, வேறுபாடு இருக்கலாம். மேலும், சில பல்கலைகள், செப்டம்பர் மாதத்தில், இடை சேர்க்கையையும்(mid term intake) நடத்துகின்றன.
ஜப்பான்
படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது.
செமஸ்டர் தொடங்குவதற்கு ஏறக்குறைய 4 மாதங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் வகுப்புகள் தொடங்குகின்றன.
பிரான்ஸ்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விண்ணப்ப செயல்பாடு தொடங்குகிறது.
ஜுன் மாதத்திற்கு முன்னதாக, விண்ணப்ப செயல்பாட்டை முடித்துவிட வேண்டும்.
செமஸ்டர் தொடங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
ரஷ்யா
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
முதல் செமஸ்டர் - செப்டம்பர் முதல் ஜனவரி வரை
இரண்டாம் செமஸ்டர் - பிப்ரவரி முதல் ஜுன் வரை.
ஜெர்மனி
கோடைகால செமஸ்டருக்கு, ஜனவரி 15ம் தேதிக்குள்ளும், குளிர்கால செமஸ்டராக இருந்தால், ஜுலை 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடும்.
விமானம் ஏறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
குளிர்கால செமஸ்டர் அக்டோபர் மாதத்திலும், கோடைகால செமஸ்டர் ஏப்ரல் மாதத்திலும் தொடங்குகின்றன.
சிங்கப்பூர்
மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன.
குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
கனடா
மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக, 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே, விண்ணப்ப செயல்பாடுகள் தொடங்கி விடுகின்றன.
செமஸ்டர் தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும், குளிர்கால வகுப்புகள், அவ்வப்போது, இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அதாவது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒன்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்றுமாக நடைபெறுகிறது.
அயர்லாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாகவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
புறப்படுவதற்கு 8 முதல் 10 வாரங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்குகின்றன. சில சமயங்களில் பிப்ரவரி மாதமும் தொடங்கும்.
நியூசிலாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
படிப்பு தொடங்குவதற்கு 8 முதல் 10 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்தல் நன்று.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வகுப்புகள் தொடங்குகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக