ஹைதராபாத், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இக்கல்வியாண்டில் முழுநேர டிப்ளமோ படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்: முதுகலை பட்டயப் படிப்பில் (கம்ப்யூட்டர் புரோக்ராமிங், பயாலாஜிக்கல் டேட்டாபேஸ், பயோ - கெமிஸ்ட்ரி) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கணினி உள்ளிட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரூ.100க்கான வரைவோலை வழங்கி படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: மாணவர்கள் இளைநிலையில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத்தேர்வு கிடையாது.
செப்டம்பர் 22 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் ரூ.100 அபராத தொகை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக