Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 2 ஜூலை, 2013

சௌதி அரேபியாவில் வெளிநாட்டவருக்கான சலுகை நான்கு மாதக் காலம் நீட்டிப்பு

சட்டமீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி
செய்துகொள்ளவோ சவூதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதிக்குள் (அரபு
புதுவருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு மீளவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான கடவுச் சீட்டுகளின்றியும், பணி ஆவணங்கள் இன்றியும் தவித்த பல வெளிநாட்டவருக்கு, குறிப்பாக இந்தியருக்கு இந்தச் சலுகைக் கால நீட்டிப்பு பெரும் ஆறுதலாகவும்,ஆசுவாசமாகவும் அமைந்துள்ளது. முன்னதாக, சட்ட மீறலா, உரிய ஆவண அனுமதியின்றி தங்கிப் பணிபுரிவோர் ஜூலை 3ம் தேதிக்குப் பின்னர் பிடிபட்டால் கடும் சிறைவாசமும், அபராதமும் விதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க செய்தியாக, இவ்வாறு தாயகம் மீள்வோர், மீண்டும் பணி வாய்ப்பு பெற்று ஒழுங்கான சட்ட முறைமைகளுக்குட்பட்டு
மீண்டும் சவூதி வரலாம் என்றும் அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.
முன்னதாக, துயருறும் இந்தியர்கள் தாயகம் மீள்வதற்குரிய அவசரக் கடவுச் சான்று (EC) பெறவும், அல்லது, முறையான பணி வாய்ப்புகளைப் பெறவும் இந்தியத் தூதரகம் விழிப்புணர்வுடன் செயற்பட்டதும், ரியாத் தமிழ்ச் சங்கம்
உள்ளிட்ட இந்தியர் அமைப்புகள் அதில் பெரும்பங்கு ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி மன்னரின் இந்த சலுகை அறிவிப்புக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக