பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்விகளுக்கு அடுத்தபடியாக, மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் கல்வியாக பயோ இன்பர்மேடிக்ஸ் உள்ளது.
உயிரியல் தகவல்களை, கம்ப்யூட்டர் மேலாண்மை மூலம் ஒருங்கிணைத்து விஞ்ஞானரீதியான ஆராய்ச்சிகள், முடிவெடுக்கத் தேவையான தகவல்கள் அறிதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய படிப்பே பயோ இன்பர்மேடிக்ஸ். இது உயிரியல் படிப்புக்கும், கம்ப்யூட்டர் படிப்புக்கும் இடைப்பட்டது.
இரண்டையும் பயன்படுத்தி, 23 ஜோடி குரோமோசோமில் உள்ள 3 பில்லியன் ராசாயன டி.என்.ஏ., குறியீடுகளை அறிய பயன்படுகிறது. நோய்களுக்கான மரபு சார்ந்த காரணங்களை அறிதல் மற்றும் அதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுதலும் அடங்கும்.
பயோ இன்பர்மேடிக்ஸ் இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஓராண்டு டிப்ளமோ படிப்பாக கற்றுத்தரப்படுகிறது. பி.சி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.இ.,/பி.பார்ம்., முடித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம்.
கல்வி நிறுவனங்கள்
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* கோல்கட்டா பல்கலைக்கழகம்
* ஐ.பி.ஏ.பி., பெங்களூரு
* ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி
* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
* மைசூரு பல்கலைக்கழகம்
* புதுச்சேரி பல்கலைக்கழகம்
* புனே பல்கலைக்கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக