தோல் துறை தொடர்பான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சோதனை, வடிவமைப்பு, முன்னேற்பாடு, திட்டமிடுதல் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய பணிகளில் ஈடுபட்டு, உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிறுவனமாக திகழும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம(CLRI), 1948ம் ஆண்டு சென்னை அடையாரில் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்., போன்ற படிப்புகளை, மாணவர்களுக்காக நடத்துகிறது.
காலணிகள் தயாரிப்பு, காலணிகள் வடிவமைப்பு குறித்த பல்வேறு விதமான படிப்புகளும் இங்கே வழங்கப்படுகிறது. தோல் தொடர்பான துறைகளில் அதிக ஆர்வமுள்ள மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கலாம்.
இந்நிறுவனம், ஆமதாபாத், கான்பூர், ஜலந்தர், கொல்கத்தா போன்ற இடங்களில் மண்டல மையங்களையும் கொண்டுள்ளது.
விபரங்களுக்கு www.clri.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக