வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இல்லத்தில் காவல்துறையினர் அத்து மீறி அநாகரீகமாக நடந்து கொண் டது பற்றி விசாரித்து நட வடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை உயர் அதிகாரி களுக்கும், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று 08.04.2013 காலை வெளிவந்த தினமலர் நாளிதழில், "வேலூர் எம்.பி. அண்ணன் மகன் வைர நகைகளுடன் தலைமறைவு" என செய்தி வெளியிடப்படிருந்தது.
அத்துடன் அவரது சென்னை இல்லத்தில் சோதனை நடப்பதாக தலைமை செயலகத்திலிருந்து பரப்பப்ட்ட செய்தியை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.இது பற்றி கேரள தொலைக்காட்சி ஊடங்களில் எழுத்துக்கள் ஓடவிடப்பட்டன.
இச்செய்தி தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு தொலை பேசி விசாரிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இது பற்றி நாம் விசாரித்து அறிந்த வரையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
முத்துப்பேட்டையல் பரபரப்பு
எம். அப்துல் ரஹ்மான் எம்.பியின் புதல்வியின் திரு மணம் வரும் மே 5ம் தேதி திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கான அழைப் பிதழ் கொடுக்கும் பணியில் அக்குடும்பம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. எம்.பியின் உடன் பிறந்த சகோதரர் ராஜ் முஹம்மது புதல்வர் முஹம்மது நிஜாம் வெளிநாட்டில் பணி செய்கிறார். இவர் மீது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் என்ற காவல் துறை அதிகாரி தலைமையில் 5ம் தேதி மாலை போலீசார் முத்துப்பேட்டைக்கு சென்றுள் ளனர். அங்கு குற்றம் சுமத்தப் பட்டவரை தேடுவதற்கு பதிலாக எம்.பியின் முத்துப்பேட்டை இல்லத்தின் முன் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்காவல்துறை கூட்டத்தை கூட்டி பரபரப்பை உண்டாக்கி யுள்ளனர்.
அதன் பின்னர் இரவு (சூரிய அஸ்தமனத்திற்கு பின்) 7 மணி யளவில் எத்தகையை சோதனை வாரண்டும் கைது வாரண்டும் இல்லாமல் எம்.பி.யின் இல்லத் தில் நுழைய முற்பட்டிருக்கின் றனர்.
எம்.பியின் வயதான தாயார் தன் வீட்டில் எந்த ஆண்களும் இல்லை. ஆண்கள் வந்த பின் வாருங்கள் என கூறியிருக் கிறார் ஆனால் கதவை திறக்க வில்லையெனில் உடைத்து உள்ளே வருவோம் என அடம் பிடித்த காவல்துறையினர் அத்து மீறி உள்ளே நுழைந்திருக் கின்றனர். ஒவ்வொரு அறை யாக தேடி பார்த்தும் தாங்கள் தேடியது கிடைக்க வில்லை என திரும்பி சென்றிருக்கின்றனர்.
எம்.பியின் இல்லம் தேவை யில்லாமல் அவமானப்படுத்தப் பட்டதற்கு உள்ளுர் காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டு வன் என்பவரே காரணம் என்றும் எண்ணற்ற புகார்களின் பேரில் பணிமாற்றம் செய்யப்பட்ட அவர் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும்
முத்துப்பேட்டைக்கே வந்துள்ளார் என்றும் அவரே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிவிட்டார் என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தினர். தனது திட்டப்படி 6ம் தேதி காலை முத்துப்பேட்டை வந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. காவல்துறை அதிகாரிகளிடம் """"""""ஒரு எம்.பியின் இல்லம் எனத் தெரிந்தும் எத்தகையை சோதனை வாரண்டும் இல்லாமல் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டது ஏன் எனக் கேட்ட போது "தவறாக நடந்து விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று மட்டுமே சொல்லியுள்ளனர். ஆனால் ஊடகங்களில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளதே ஆகவே நான் நவடிக்கை எடுப்பேன் என எம்.பி. உறுதியாக கூறிவிட்டார்.
இதன்படி தஞ்சாவூர் காவல் துறை துணைத் தலைவரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டு ள் ளது.
சென்னையில் புரளி
இதனிடையே சென்னையில் உள்ள எம்.பி.யின் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக இன்று காலை தலைமை செயவகத்திலிருந்து செய்தி பரப்பப்பட்டு ஊடகத் தினர் ஏராளமானோர் குவிந்த னர்.
ஆனால் எத்தகைய சோதனையும் நடைபெறவில்லை என்பதும், இது வீண் புரளி என்பதும் தெரிந்து அவர்கள் கலைந்து சென்றனர். திட்ட மிட்டப்படி எம்.பியின் குடும்பத் தினர் திருமண அழைப்பிதழை கொடுப் பதற்காக காலை யிலேயே வெளியில் சென்றி ருந்தனர். எம். அப்துல் ரஹ்மான் எம்.பியும் வேலூர் தொகுதியில் நடை பெறும் விழாவில் பங்கேற்க சென்றிருந்தார்.
ஆனால் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு உழைப்பதாலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மிகச்சிறந்த பணியாற்றுவ தாலும், நாடாளுமன்ற நடவடிக் கைகளில் அற்புதமாக வாதம் செய்வதாலும் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அனைவராலும் புகழப்படுகிறார். அவரது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டே இச்சதி நடைபெறுவ தாக தெரிகிறது.
எனவே இந்த சோதனை மற்றும் புரளி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கு புகார் செய்ய இருப்பதாக எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர் களிடம் தெரிவித்தர்.
தமிழக அரசு அத்துமீறிய காவல் துறை அலுவலர்களை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்... இதற்கு உறுதுணையாக இருந்தவர்களை இனம் கண்டு சட்டப்படி தண்டிக்க வேண்டும்...இதற்கான முயற்சியை அனைத்துலக காயிதே மில்லத் பேரவை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரைவில் மேற்கொள்ளும்...இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் உள்ள ஒரு உறுப்பினர் கூட கறுப்புப் பணம் உடையவர் அல்ல...எங்களின் இனமான சமுதாயத் தலைவர் இன்று வரை சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்...தன் சொத்துகளை சமுதயாத்திற்காக கொடுத்திருக்கிறார்...அந்த வழி வந்த எங்களின் தளபதி பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் அவர்களும் அவ்வழியிலேயே வாழ்பவர்...நாசத்தை விரும்பும் நிலை குலைந்தவர்களே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுமையை கையாளுவதனால் நீங்கள் அத்து மீறி விட்டீர்கள்...எம்பெருமானார் மட்டும் பொறுமையை கட்டாயமாக்காவிட்டால் இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு தமிழகம் என்று ஒன்று இல்லாமலே போயிருக்கும்...அல்லாஹ் எங்களைக் காப்பானாக...தளபதி அப்துல் ரகுமான் அவர்களே...இந்த தூசிக்கெல்லாம் தளர்வு அடைந்து விடாதீர்கள்...இறைவன் நம்மோடு இருக்கிறான்...உங்கள் கை சுத்தமானது என்பதை அந்த நய வஞ்சகர்களுக்கு நிருபணமாக்கி விட்டான்...எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...
பதிலளிநீக்குஇங்கு என் கருத்தை பதிய வாய்ப்பளித்த அனைத்து சகோதரர்களுக்கும் முதலில் நன்றி....இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எங்கள் தளபதி அண்ணன் அப்துல் ரகுமான் அவர்கள் தி.மு.க. எம்.பி தான்...பாராளுமன்றத்தின் திகட்டாத முஸ்லிம் லீக் கண்மணி (தி.மு.க) உறுப்பினர்...இஸ்லாமியர்களுக்காக போராடும் திராவிட முஸ்லிம் லீக் கற்கண்டு(தி.மு.க)....அனைத்து சமுதாய மக்களுக்காக வாதாடும் திண்ணமான முஸ்லிம் லீக் கருவேப்பிலை (தி.மு.க)...தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் திக்கெட்டும் முழங்கும் கம்பீர பீரங்கி (தி.மு.க)...தி.மு.க. விற்கு விளக்கம் போதுமா நண்பர்களே...இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்காக போராடும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இணையாமல், பிற கட்சிகளில் இருக்கும் நீங்கள்தான் கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் நிற்பதற்கு காரணத்தை உருவாக்கின் கொடுத்தீர்கள்...இந்தியா சுதந்திரம் அடைந்த பின் திக்கற்று நின்ற இஸ்லாமியர்களுக்கு கலங்கறை விளாக்காய் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று இஸ்லாமியர்களை ஒன்றிணைக்க போராடி வரும் நிலையை கொடுத்ததற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்...இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய்ச்சபைக்கு வாருங்கள்...தமிழ்நாடென்ன இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டலாம்...அல்லாஹ்வின் நாட்டத்தால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தற்போது தேசிய அங்கீகாரமும், தனிச் சின்னமும் பெற்றுள்ளது...இனி வரும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தனிச் சின்னத்தில் தேர்தல் களம் கண்டு இன்ஷா அல்லாஹ் வெற்றி காண்போம்...அல்லாஹ் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வெற்றியை தந்தருள்வானாக என்று அனைவரும் துஆ செய்வோமாக...குறை கூறிப் புறம்பேசுவோர்க்கு மறுமையில் கேடுதான் என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாக்கு...
பதிலளிநீக்கு