சவூதி அரேபியா நாட்டில் புதிய தொழிலாளர் கொள்கை நிடாகட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தனியார் துறைகளில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை பரவலாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்நாட்டு அரசு இக்கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் அந்நாட்டில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் தமிழகம் கேரள மாநிலங்களில் இருந்து சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்களின் நிலை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு விவகார துறை இணை மந்திரி ஈ. அகமது நிருபர்களிடம் கூறும்போது, சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிடாகட் எனப்படும் புதிய தொழிலாளர் கொள்கையால் அங்கு தங்கி பணிபுரியும் இந்திய நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. புதிய கொள்கையால் அடுத்த இரு மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. சவூதி அரேபிய அதிகாரிகள் அதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளனர். மேலும், இவ்விவகாரம் குறித்து வருகிற ஜூன் மாதத்திற்குள் விவாதித்து தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புபவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மத்திய அரசு அடுத்த வாரம் ஆலோசனை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக