உச்ச நீதிமன்றம், 21 உயர் நீதிமன்றங்களில் 24,127 பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பது: மொத்தமுள்ள 24,127 பாலியல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் 335 பாலியல் வழக்குகளும், பல்வேறு மாநிலங்களில் உள்ள 21 உயர் நீதிமன்றங்களில் மீதமுள்ள பாலியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் 8,215 வழக்குகள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தை மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 179 பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மிகக் குறைந்த அளவாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்திலும் முறையே 27, 26 என்ற எண்ணிக்கையில் வழக்குகள் உள்ளன. சிக்கிம் உயர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்குகள் ஏதுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக