"நாட்டின், முதல் மோனோ ரயில், மும்பையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மோனோ ரயிலின் சிறப்பம்சங்களாவன: உலகின், இரண்டாவது நீண்ட தூர மோனோரயில், இதுவாகும். ஜப்பானின், ஒசாகோவில், 23.8 கி.மீ.,க்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக,19.54 கி.மீ., தூரம், மும்பை மோனோ ரயில் இயக்கப்படும்.
மோனோ ரயிலில், பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படாது; மின்சாரத்தில் இயங்கும். எனினும், சாதாரண மின்சார ரயில்களை விட, 25 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திறன் கொண்டவை. அதிகபட்சமாக, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயில், ஓடும் போது, தானாக மின்சாரத்தை தயாரிக்கும் திறன் கொண்டது. முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட, நான்கு பெட்டிகளைக் கொண்டது. ரயில் பெட்டியில்,18 பேர் அமர்ந்து பயணிக்கலாம்; 124 பேர் நின்று கொள்ளலாம்.
அபாய காலங்களில், பயணிகள், ஓட்டுனருடன் தொடர்பு கொள்ள முடியும். பெட்டிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பச்சை, நீலம், வெளிர் சிவப்பு ஆகிய நிறங்களில், ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட் டுள்ளன. அபாயகரமான வளைவுகளில், அசம்பாவிதங்களை தவிர்க்க, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சாதாரண ரயில்களைப் போல் இல்லாமல், இதில், இருக்கைகள் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.மும்பை மோனோ ரயில் குறித்து, மகாராஷ்டிர மாநில தலைமை செயலர், ஜே.கே.பந்தியா கூறியதாவது: மும்பை மோனோ ரயில் திட்டம், 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். கிடைத்ததும், ஆகஸ்ட் முதல் இயக்கப்படும்.3,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மோனோ ரயில் திட்டம், முதற்கட்டமாக, செம்பூர் முதல், வடாலா வரை, 8.8 கி.மீ.,க்கு இயக்கப்படும். இவ்வாறு, பந்தியா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக