துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் கவிஞர் ஜெயராமன் ஆனந்தி எழுதிய குறைந்து போன கடிதப் பழக்கம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 14ம் தேதி காலை 10.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை ஜெயா பழனி பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் முத்துப்பேட்டை ஷரிபுத்தீன் வரவேற்க, ஹெல்த் கணேசன் தலைமையேற்று உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் ரவி பாரதி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழின் பெருமைகள் பற்றியும், கர்மவீரர் காமராசர் பற்றியும், கவியரசு கண்ணதாசன் படைப்புகள் பற்றியும் தனது அனுபவத்தோடு கலந்து வழங்கி அனைவரையும் கவர்ந்தார்.
நிகழ்வில் யு.ஏ.ஈ. தமிழ்ச்சங்கத் தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் கலந்து கொண்டு தியாகம் மற்றும் பிறந்தநாள் தலைப்புகளில் எழுதிவந்த கவிதைகளை வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றார். விழாவில் விருதை மு.செய்யது உசேன், திண்டுக்கல் ஜமால், காவிரிமைந்தன், முகவை முகில், ஜெயாபழனி, வெற்றிவேல் செழியன், முதுவை ஹிதயத்துல்லா, கிளியனூர் இஸ்மத், யமுனா லிங்கம், பொற்செல்வி கண்ணன், ஆதிபழனி, ந.அழகப்பன், விவேகானந்தன், சுந்தர், மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் கவிஞர் இரவி பாரதிக்கு ரமேஷ் விஸ்வநாதன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். நினைவுப் பரிசினை கிளியனூர் இஸ்மத்தும், ரமேஷ் விஸ்வநாதனும் முத்துப்பேட்டை ஷரிபுத்தீனும்.
‘குறைந்து போன கடிதப் பழக்கம்’ கவிதை நூலின் முதல்பிரதியை கவிஞர் ரவி பாரதி வெளியிட கவிஞர் யமுனாலிங்கம் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை ரமேஷ் விஸ்வநாதன் வெளியிட முகவை முகிலும், மூன்றாம் பிரதியை பொற்செல்விகண்ணன் வெளியிட கவிதா பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் கவிஞர் ஜெயராமன் ஆனந்திக்கு வானலை வளர்தமிழ் சார்பில் சிறப்பு விருந்தினர் கவிஞர் இரவி பாரதி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிஞர் காவிரிமைந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். நூலாசிரியருக்கு நினைவுப் பரிசினை விமல்ராஜ் வழங்கினார்.
கவிஞர் ஜெயராமன் ஆனந்தியின் ஏற்புரையைத் தொடர்ந்து அடுத்த மாதத் தலைப்புகளான ‘அலைகள்’ மற்றும் ‘கலைகள்’ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 10 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. விழாவின் தொடக்கம் மற்றும் முடிவில் பீர் முகம்மது திரைப்பாடல்கள் பாட்டியது விழாவிற்கு மற்றுமொரு சுவை சேர்த்தார்.அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்வினைதொகுத்து வழங்கினார். திண்டுக்கல் ஜமால் நன்றியுரையாற்றிட விழா நிறைவுக்கு வந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ்,காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி, மற்றும்ஆதிபழனி, ஜெயராமன் ஆனந்தி ஆகியோருடன் இணைந்து முதுவை ஹிதாயத்துல்லா மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
- செய்தியாளர் முதுவை ஹிதாயத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக