சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தி பேசுகையில் : - கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அலுவலகம் அமைக்க அரசு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவித்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் தற்போது அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கடையநல்லூரை பொறுத்தவரை தென்காசி தாலுகாவில் இடம்பெற்றுள்ளது. கடையநல்லூர் பிர்கா, சேர்ந்தமரம் பிர்கா மற்றும் சிவகிரி தாலுகாவில் உள்ள நகராட்சி ஆகியனவற்றை ஒன்றிணைத்து கடையநல்லூர் தாலுகாவில் இடம் பெறும் வகையில் பஞ்.,கள் பிர்கா வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தற்போது கடையநல்லூர் தாலுகா அமையும்போது அதற்கான எல்கை எந்த பகுதியில் இருக்க வேண்டுமென்பது தொடர்பான வரைபடங்கள் வருவாய்த்துறை மூலம் அளவிடப்பட்டு வருகிறது. மேலும் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெறக்கூடிய பஞ்.,கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் போன்றவை குறித்த பட்டியல்கள் தொடர்பான கருத்துருக்களும் கோரப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கடையநல்லூர் தாலுகா அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தாலுகா அலுவலகம் எந்த இடத்தில் அமையக்கூடும் என்பது தொடர்பான சர்வே நம்பர்களையும் வருவாய்த்துறை மூலம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக