Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 டிசம்பர், 2012

1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் சொந்த வீடு ரெடி!

ஏழைகள் வீடு கட்டுவது என்பதே கனவு என்றாகிவிட்ட நிலையில், அந்தக் கனவு இல்லத்தை மிக மிகக் குறைந்த செலவில் கட்டித் தருகிறார் ஓர் என்ஜினீயர்

‘லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜி’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெறும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் 25 நாட்களிலேயே தரமான வீடுகளை கட்டிக்கொடுத்து வருகிறார், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த என்ஜினீயர் ர
விச்சந்திரன்.

எப்படி இது சாத்தியம்? விவரிக்கிறார் ரவிச்சந்திரன்...

நான் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் வரைக்கும் படிச்சிருக்கேன். கடந்த 22 வருஷங்களாக 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கேன். மழைக்காலம் ஆரம்பிச்சாலே எங்க கடலூர் மாவட்டத்துல அதிக வெள்ளச் சேதம் உண்டாகும். கான்க்ரீட் வீடுகள்ல வாழுற மக்களுக்கு சேதம் மிகக் குறைவுதான். ஆனா, குடிசைவாசிகளோட நிலைமை ரொம்பப் பரிதாபமா இருக்கும். வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்து குடிசையே இடிந்து போவதோடு, எங்காவது மண்டபங்களில் தங்கற கொடுமையும் அடிக்கடி நடக்கும். ஏழை மக்களுக்கு கான்க்ரீட் வீடு என்பது எட்டாமலேயே இருக்கிறது. அப்படியே கான்க்ரீட் வீடு கட்டலாம்ன்னு சிலர் முயற்சி பண்ணினாலும் கட்டுமானப் பொருட்களோட விலை உயர்வால் பல லட்சங்களுக்கு கடனாளியாக மாறி கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையைப் போக்கி நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெற வேண்டும் என்ற அக்கறையில், மிகக் குறைந்த செலவில் குறைந்த நாட்களில், அஸ்திவாரத்துல கம்பியே இல்லாம புதிய தொழில்நுட்பத்தில் தரமான வீடுகளை கட்டித் தரணும்ன்னு கடந்த 10 வருஷங்களாய் செயல் திட்டம் தீட்டினேன். கடந்த 6 மாதங்களாக என்னுடைய செயல்திட்டம் வீடுகளாக முழுமையடைந்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது 220 சதுர அடியில் 11 அடி உயரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் 25 நாட்களிலேயே பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி தரமான வீடுகளைக் கட்டி வருகிறேன். இதே அளவில் மற்ற கட்டிடப் பொறியாளர்கள் வீடுகளைக் கட்டினால், 3 லட்சம் ரூபாய்க்குமேல் செலவாவதோடு 60 நாட்கள் வரை இழுக்கும்" என்றவர் தொடர்ந்து,

பொதுவாக வீட்டின் அடியிலும் மேல் பகுதியிலும் கான்க்ரீட் மோல்டுகளை தனித்தனியாகப்போடுவதால், ஆட்கள் கூலியும் அதிக நாட்களும் பிடிக்கும். ஆனால், நான் கட்டும் வீடுகளுக்கு மொத்தமாக இரண்டு மோல்டுகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். பிளிந்திபீம், காலம், ராஃப்ட் போன்றவற்றை ஒரே மோல்டாக இணைச்சி, வீட்டுக்கு அடியிலும் ரூஃப் ஸ்லாப் (Roof Slap), காலம், லின்டெல் கம்சன்ஷெட் (Lintel Cumsunshede) ஆகியவற்றை வீட்டின் மேற்கூரையிலும் போட்டு, தேவையான இடத்தில் மட்டுமே கம்பிகளை வைத்து வீட்டிற்கு வலு சேர்க்கிறேன். இப்படிக் கட்டும் வீடுகள் 75 ஆண்டுகளுக்கும் மேலே தரமானதாகவும் வலுவானதாகவும் இருக்கும். இதனால், வீடு கட்ட ஆரம்பித்த நாளிலிருந்து சரியாக 25ம் நாள் முழு வீட்டையும் கட்டி முடித்து, சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுவோம். கட்டிடங்களுக்கான மெட்டிரியல் கலெக்‌ஷன், கடக்கால் எடுத்தல், மணல் பரப்புதல்,பேஸ்மெண்ட் போடுதல், சென்ட்ரிங் அடித்தல் போன்ற வேலைகளை முதல் 10 நாட்களிலேயே முடித்து, மீதமுள்ள 15 நாட்களில் பார்ட்லி ஃப்ரேம்டு ஸ்ட்ரக்ச்சர் மற்றும் முழுமையான ஃப்ரேம்டு ஸ்ட்ரக்ச்சர் என்ற இரண்டு முறைகளில் சுவர் எழுப்பி வீட்டை முழுமைப்படுத்தறோம்" என்று கூறும் ரவிச்சந்திரன், தான் கட்டும் வீடுகளில் ஒரு ஹால், கிச்சன், டாய்லெட், செஃப்டிக் டேங்க், மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற வசதிகளை செய்து தருகிறார்.

லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜிக்காக தமிழ்நாடு அறிவு சார்ந்த பொருட்கள் கழகத்திடம் காப்புரிமையும் பெற்றுள்ளார். மேலும் ரவிச்சந்திரன் இதுவரை லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜியில் 5 வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு வீட்டைப் பார்வையிட்டபோது, அந்த வீட்டின் உரிமையாளரான கோவிந்தராஜன், இத்தனை வருஷமா நாங்க கூரை வீட்டுலதான் வாழ்ந்துக்கிட்டு வந்தோம். இந்த நிலையிலதான், எங்களுக்கு வீடு கட்ட அரசு மூலமா 1 லட்சம் ரூபாய் மானியம் வந்துச்சி. தெரிஞ்ச கட்டிட மேஸ்திரிங்க கிட்டபோய் கான்க்ரீட் வீடு கட்டித் தரச் சொன்னதுக்கு 3 லட்சம் ரூபாய்க்குமேல செலவாகும்னு சொல்லி, கைய விரிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் ரவிச்சந்திரன் சார், குறைஞ்ச செலவுல சீக்கிரமா வீடு கட்டித் தர்றாருனு கேள்விப்பட்டு அவருகிட்டப் போனோம். மொத்தமா 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் குடுத்து, வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ரவிச்சந்திரன் சாரு கூடவே போய் வாங்கனோம். இருபத்தி அஞ்சே நாளில் புது வீட்டைக் கட்டிக் குடுத்த அவரை எங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்" என்று நெகிழ்கிறார்.

குடிசைகளில் வாழ்கிற ஏழை மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தர திட்டமிடுகிற தமிழக அரசு, ரவிச்சந்திரனின் ‘லோ காஸ்ட் பில்டிங் டெக்னாலஜி’யைப் பயன்படுத்த ஆவன செய்யலாமே!

Contact Information
T.ravichainthrin
27, Anna Nagar,
Kurinjipadi – 607 302.
Ellappanpettai Roadway,
Near Sugarcane Office,
Cuddalore Dt.
Telephone :04142-258783
Cell Phone : : 9865622974
Email : ravichainthrin.lee@gmail.com


---பூ. சர்பனா

28 கருத்துகள்:

  1. மகிழ்ச்சியான செய்தி எனக்கு திருவாரூர் மாவட்டம் அங்கு இது போன்ற ஒரு வீடு கட்டித்தர முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சியான செய்தி எனக்கு திருவாரூர் மாவட்டம் அங்கு இது போன்ற ஒரு வீடு கட்டித்தர முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. ஐயா எங்களுக்கு திருச்சி இனாம் குளத்தூரில் ஆயிரத்து ஐம்பது சதுர அடி நிலம்உள்ளது அதில் இரண்டுலட்சத்தில் வீடுகட்டிதருவீர்களா உடனே தொடர்புகொள்ளுங்கள்6381463364

    பதிலளிநீக்கு
  4. ஐயா எங்களுக்கு திருச்சி இனாம் குளத்தூரில் ஆயிரத்து ஐம்பது சதுர அடி நிலம்உள்ளது அதில் இரண்டுலட்சத்தில் வீடுகட்டிதருவீர்களா உடனே தொடர்புகொள்ளுங்கள்6381463364

    பதிலளிநீக்கு
  5. Enga veedu kati 11 varusham aagirathu. Veetu base gundu kal potu katitaanga, so base strong illanu solitanga, mel thalathula sheet pota veedu iruku, ipo adhukum mela veedu kata mudiyathu, so veedai idikama 4 or 6 pillar koduthu mela 3 vathu veedu kata mudiyuma, veetuku edhuvum pathipu varuma, illana vera edhuvum option irundha sollunga

    பதிலளிநீக்கு
  6. Enga veedu kati 11 varusham aagirathu. Veetu base gundu kal potu katitaanga, so base strong illanu solitanga, mel thalathula sheet pota veedu iruku, ipo adhukum mela veedu kata mudiyathu, so veedai idikama 4 or 6 pillar koduthu mela 3 vathu veedu kata mudiyuma, veetuku edhuvum pathipu varuma, illana vera edhuvum option irundha sollunga

    பதிலளிநீக்கு
  7. மன்னார்குடி அருகே பலையகோட்டை கிராமத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் 9176552898

    பதிலளிநீக்கு
  8. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ள இது
    போல் வீடு கட்ட வேண்டும் pH 9787215500 s.பழனி

    பதிலளிநீக்கு
  9. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடு கட்ட முடியுமா 9626863128

    பதிலளிநீக்கு
  10. ஐயா வணக்கம் நான் தூத்துக்குடி மாவட்டம் எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும் குறைந்த செலவில்

    பதிலளிநீக்கு
  11. ஐயா வணக்கம் நான் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும் குறைந்த சிலவில் cell 6374120964

    பதிலளிநீக்கு
  12. சிறப்பாக இருக்கின்றது நன்றி

    பதிலளிநீக்கு
  13. ஐயா வணக்கம் நான் நாமக்கல் மாவட்டத்தில் நத்தமேடு.எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்.செல்.9597761610.

    பதிலளிநீக்கு
  14. ஐயா நான் தென்காசி எனக்கு இது பேல் விடு கட்ட வேண்டும் என்னுடைய நம்பர் 9080616297

    பதிலளிநீக்கு
  15. நான் Erode மாவட்டம் எனக்கு உதவ முடியுமா ஐயா

    பதிலளிநீக்கு
  16. ஐயா உங்கள் நெம்பரை தாருங்கள் ஐயா எனக்கு இரண்டு அல்லது மூன்று லட்சத்திற்கும் குறைந்த சிலவில் வீடு வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டம் தூரம் என்றாலும் ஐடியா தாருங்கள் அய்யா..8258061680...9159809245

    பதிலளிநீக்கு
  17. Today most of the Doctors doing service commercially. But, in this scenarios you are doing unexpected level service to poor families with your won technology. My heart full wishing to you for continue developments services to reach mainly village peoples.

    பதிலளிநீக்கு
  18. எனக்கு கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் வீடு கட்டிதமுடியும்மா Sir 9791946294,9843776899

    பதிலளிநீக்கு
  19. ஐயா நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளோம் மிகவும் பின்தங்கிய குடும்பம் அதனால் எங்களுக்கு ருபாய்2லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டி தருவிங்கலா என்னுடைய நம்பர் 9942750804

    பதிலளிநீக்கு
  20. 24
    ஐயா நாங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளோம் மிகவும் பின்தங்கிய குடும்பம் அதனால் எங்களுக்கு ருபாய்2லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டி தருவிங்கலா என்னுடைய நம்பர் 9789101001

    பதிலளிநீக்கு
  21. எனக்கு அரக்கோணத்தில் வீடு கட்டி தர முடியுமா. 80985 95292 என்னுடைய நம்பர். ஆகஸ்ட் 20 என் தம்பி க்கு திருமணம். அதற்கு சொந்த வீடு வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. Can you build my house in Chennai only one floor already g floor 5 year old answer 9380931316

    பதிலளிநீக்கு
  23. ஐயா நாங்கள் தஞ்சை மாவட்டம் எங்களுக்கு 6லட்சம் மதிப்பில் மேல் ஒருவர் கீழ் ஒருவர் வசிக்கும் அளவு கட்டி தர முடியுமா 8248084244

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்.நான் மீன்சுருட்டியிலிருந்து.எனக்கு இரண்டுலட்சத்தில் வீடு கட்டவேண்டும் எனதுதொலைபேசி:9488249941

    பதிலளிநீக்கு
  25. ஐயா தஞ்சாவூர் ஆவாரம்பட்டி கிராமம் 100000 to 150000 குள் வீடு கட்டி தர முடியுமா எனது no:9384755028

    பதிலளிநீக்கு