ஜப்பான் சீக பெர்பெக்சர் யுனிவர்சிட்டியில் பயிலும் ஜப்பானிய ஆராய்ச்சி மாணவர் சுக்ராய்(23),மாணவி சின்யா யூ வேனிஸ்(23) ஆகியோர் சுற்றுலா மற்றும் பழங்கால கட்டிட கலை ஆராய்ச்சிக்காக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதிக்கு வந்தனர். வெளிநாட்டிநர் ஆராய்ச்சிக்காக இங்கு வரும் போது உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளை இவர்கள் பின்பற்றததால் போலீசார் இப்பகுதியில் சுற்றுவதற்கு அனுமதி மறுத்தனர்.இதனால் இவர்கள் ஹோட்டலில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்த தொல்பொருள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கீழக்கரை இளைஞர் அபுசாலிஹ் இவர்கள் முறையான அனுமதி பெறுவதற்கான உதவிகளை செய்து தந்து அறிவுரைகளும் வழங்கினார்.
இது குறித்து ஜப்பானிய மாணவிகள் கூறியதாவது, நாங்கள் ஏற்கெனவே கட்டிட கலை ஆராய்ச்சிக்காக இந்தியா வந்துள்ளோம் 2 மாதத்திற்கு மேல் தங்கியிருந்து ராமேஸ்வரம்,கீழக்கரை பகுதியில் பழங்கால் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.இங்குள்ள பழங்கால கட்டிடங்கள் எங்களை பிரமிக்க வைத்தது. எனவே தற்போது எங்கள் படிப்பிற்கான ஆராய்ச்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் வந்தோம்.இப்பகுதிக்கு வந்த நாங்கள் இம்முறை தனியாக வந்ததாலும்,மொழி தெரியததாலும் அரசு முறை சம்பிராதயங்களை நிறைவு செய்ய முடியவில்லை.இதனால் ஹோட்டலை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நாங்கள் சென்ற முறை அறிமுகமான நண்பர் அபுசாலிஹை தொடர்பு கொண்டோம்.அதன் பேரில் அவர் எங்களுக்கு உதவினார்.தமிழக மக்கள் விருந்தோம்பலுக்கு சிறந்தவர்கள் என்று அறிந்திருந்தோம் தற்போது நேரில் கண்டுகொண்டோம் என்றனர்.
இது குறித்து அபுசாலிஹ் கூறியதாவது,
இவர்கள் சென்ற முறை எனக்கு அறிமுகமானார்கள்.தற்போது மீண்டும் தொடர்பு கொண்டும் உதவ வேண்டும் என்று கேட்டார்கள் அதனடிப்படையில் அரசின் முறையான அனுமதியை பெறுவதற்கு உரிய வழிமுறைகளை அமைத்து தந்தேன்.மேலும் கீழக்கரை வரலாற்று சிறப்புமிக்க இடமாக இருப்பதால் சுற்றுலாத்துறை கீழக்கரையில் தகவல் சிறப்பு மையம் ஒன்றை ஏற்படுத்தி இதுபோன்று வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவ வேண்டும் என்றார்.
நன்றி :கீழக்கரை டைம்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக