இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய சபையில் எத்தனையோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருந்தும் ,தனியொருவராக நின்று இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தொன்மையான , நான் பேசும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு ,அந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) ஆவார்கள் .
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் ,தன கல்லூரி படிப்பை தூக்கி எறிந்துவிட்டு ,ஒத்துழையாமை இயக்க மாநாட்டை தான் பிறந்த நெல்லை சீமையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் )
பெரியார் ,அண்ணா ,காமராஜர் ,போன்ற தலைவர்களை எல்லா தலைமுறையினரும் அறியும் பொருட்டு அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன .அதுபோல் ,நாட்டுப்பற்றாலும் ,மொழிப்பற்றாலும் உயர்ந்து நிற்கும் அந்த பெருமகனார் யார் என்று வாழும் தலைமுறையும் , எதிர்வரும் தலைமுறையும் அறியும் பொருட்டு ,தமிழகத்தில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம் தமிழக அரசு உருவாக்க வேண்டும் .இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பது தமிழக மக்களின் அனைவரின் கடமை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக