மியான்மர் நாட்டில் உள்ள ரோகின் கயா பகுதியில் கடந்த மாதம் பயங்கர மத கலவரம் ஏற்பட்டது. மியான்மரில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். இதுபோல சிறுபான்மை மதங்களும் உள்ளன. இதில் புத்தமதத்தினருக்கும், ஒரு சிறுபான்மை மதத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது.
இந்த கலவரத்தில் 80 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரி விக்கின்றன. ஆனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள வங்காள தேசத்திற்கு ஓடினார்கள். இந்த கலவரம் தொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமை அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மியான்மரில் நடந்த கலவரத்தில் ராணுவமே அத்து மீறி நடந்து கொண்டது, அவர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக இருந்தனர். சிறுபான்மை மக்களை வேண்டும் என்றே சுட்டுக் கொன்றனர். ஏராளமான சிறுபான்மை பெண்களும் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.
மியான்மர் அரசு கலவரத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறு செய்த ராணுவத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. கண் முன்பே கலவரம் நடந்த போது ராணுவம் வேடிக்கைபார்த்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக