Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

உலக பாரம்பரிய சின்னமாகிறது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை


கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலாத் துறை, பாரம்பரிய சின்னங்கள் பட்டி யல் சேர்க்கை குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர். 

இதில் சென்னை செயி ன்ட் ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரை கட்டுரையை பேராசிரியர் ஸ்ரீராம் சமர்ப்பித்தார். அதே போல பெர்ணார்டு டிராகன் என்ப வர் செட்டிநாடு குறித்தும், ரூப்மதி ஆனந்த் என்பவர் ஸ்ரீரங்கம் கோயில் குறித்தும், சேவியர் பெணடிக்ட் என் பவர் புலிக்காடு குறித்தும் தங்களது பரிந்துரை கட்டுரைகளை அளித்துள்ளனர். 

உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆலோசனைக்குழு தலைவர் சுஜித் பாணர்ஜி இந்த கட்டுரைகளை பெற்றுக்கொண்டு, கட்டுரைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த இடங்கள் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு 

 இந்தியாவில் பிரித்தானியரின்முதலாவது கோட்டையாகும். இது, 1639ஆம் ஆண்டில் கரையோர நகரானமதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிகநடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.1678ம் ஆண்டு…கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.  1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்குஅண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்
இந்தக் கோட்டையை வடக்கு தெற்காக 108 கஜங்களும் கிழக்கு மேற்காக 100 கஜங்களாக இருக்குமாறு அமைத்தனர். அன்று கட்டப்பட்ட கோட்டை அப்படியே 1714 வரை இருந்ததாகத் தெரிகிறது. கோட்டை கட்டப்பட்டதே ஒரு தனியான சரித்திரம். கோட்டை கட்டுவதற்கான முதற்கல் 1640 மார்ச் முதல் தேதியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 1642 ஜனவரி 27ஆம் தேதியிடப்பட்ட ஒரு குறிப்பில் “சூரத் தலைமையிடத்தை இந்த ஜார்ஜ் கோட்டை” என்றே குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே ஒரு டச்சுக் குறிப்பு இதை ‘செ, ஜார்ஜ் கோட்டை’ என்று அடையாளம் காட்டுகிறது
இந்தக் கருத்து சரியாக இருக்க முடியாது என்று வேறு சிலர் கூறுகிறார்கள். ஏனெனில் மார்ச் முதல் தேதியன்றே ஆரம்பித்திருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் கட்டியிருக்க முடியாது. இங்கிலாந்தின் ரக்ஷகராகக் கருதப்படும் புனித ஜார்ஜ் முனிவர் பெயரில்தான் இந்தக் கோட்டையைக் கட்டியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது,“செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்று பெயரிடப்பட்டது. கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும்,ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினஅரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது. அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.
கோட்டையின் கொடிக்கம்பம் வந்ததே ஓர் அற்புதமான கதையாகும். 1687ஆம் வருடத்தில் கவர்னராக யேல் இருந்தபோதுதான் இந்தக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. லாயல் அட்வெஞ்சர் என்றறியப்பட்டு, அப்படித்தான் நினைக்கப்படுகிறது.
கரை தட்டி உடைந்த கப்பலின் பெயர் லாயல் அட்வெஞ்சர் ஆகையால் அக்கப்பலிலிருந்துதான் கொடிக் கம்பம் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கப்பலின் கொடிக்கம்பத்திலான கம்பம் அக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்டு கோட்டையில் ஒரு கொத்தளத்தில் நிறுத்தப்பட்டது. இதன் உயரம் 50 அடி. இதுதான் இந்தியாவிலேயே அதிக உயரமான கொடிக்கம்பம். முன்பு குறிப்பிட்டது போலவே முதல் முறையாக கவர்னர் யேல் இங்கிலாந்தின் சென் ஜார்ஜ் கிராஸ் வடிவத்துடன் கூடிய கொடியை 1687ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்றினார். இந்திய சுதந்திரத்தின் போது இதில்தான் மூவர்ணக் கொடியும் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
   ஜார்ஜ் கோட்டை இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் கட்டிய முதலாவது பிரமாண்ட கோட்டை என்ற பெயரைக் கொண்டது. 1639ம் ஆண்டு அப்போதைய மதராஸில் இது கட்டப்பட்டது. இந்தக் கோட்டைதான் சென்னைப் பட்டணத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மூல வேராகும். இந்த கோட்டையை மையமாகக் கொண்டுதான் சென்னை மாநகரம் வியாபித்து வளர ஆரம்பித்தது.
கிழக்கிந்திய கம்பெனியினராக உள்ளே நுழைந்த வெள்ளையர்கள், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்டன.
.தமிழகத்தின் செயல்பாடுகளைத் தன்னகத்தே வைத்துள்ளது இந்தக் கட்டிடம். ஆம், இந்த புனித ஜார்ஜ் கோட்டை எத்தனை அரசுகளைப் பார்த்திருக்கிறது. எத்தனை மனிதர்களின் பேச்சுக்களை கிரகித்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் கட்டப்பட்ட ‘கவுன்சில் அறைகள்’ 1693ம் ஆண்டில் தகர்க்கப்பட்டு, புது அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. நந்தானியல் ஹிக்கின்ஸ் கவர்னராக இருந்தபோது கட்டப்பட்ட அலுவலகங்களில் சில இன்னும் உள்ளன. சட்டசபையில் இருக்கும் சபை தலைவர் நாற்காலி, இங்கிலாந்தின் ‘ஹவுஸ் ஆஃப் காமர்ஸ்’ஸில் இருப்பது போலவே அமைந்திருக்கும் இந்த அசெம்பிளி நாற்காலியே ஒரு கதை சொல்லும். லார்ட் விலிங்டன் கவர்னராக இருந்தகோதுதான் இந்த நாற்காலி சபைக்கு வழங்கப்பட்டது. தனது மனைவி விலிங்டனுடன் சேர்ந்து இந்த நாற்காலியை 1922 ஆம் வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதியன்று அசெம்பிளிக்கு பரிசாக அளித்தார்.


1 கருத்து:

  1. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் பெறுமதியற்ற நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.

    அத்துடன் ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளும், வங்கிக்கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

    வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கில் கடன்களைப் பெற்றுத்தான் பன்னாட்டு ஆலைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக்கடன்பழுக்கள் மேலும் உயருமே அன்றி ஒருபோதும் முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.

    தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களையும் வங்கிக் கடனட்டைகளையும் உருவாக்கி தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.

    உலகம் பூராக ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோகக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்

    அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில் மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை, அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது

    - நல்லையா தயாபரன்

    பதிலளிநீக்கு