இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் குழுக் கூட்டம் இன்று காலை (ஆக.1) 11 மணிக்கு புதுடெல்லி ரபீ மார்க் கில் உள்ள அரசியல் சட்ட அரங் கில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத தலைவரும், மத்திய வெளியுறவு மற்றும் மனி தவளமேம்பாட்டுத்துறை இணை யமைச்சருமான இ. அஹ மது சாஹிப் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்புரையாற்றினார்.
தேசியத் துணைத் தலைவர் இக்பால் அஹமது, பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசி யச் செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., கேரள மாநில பொது செய லாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன்,
உ.பி.மாநிலத் தலைவர் மௌலானா கவுஸர் ஹயாத் கான், பொதுச் செயலாளர் டாக்டர் மத்தீன், ஜார்க்கண்ட் மாநிலச்செயலாளர் அம்ஜத் அலி, ஆந்திர மாநில பொதுச் செயலா ளர் ஆஸம் மொய்னுதீன்,
கேரள மாநில செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், பஷீர் அலி ஷிஹாப் தங்ஙள், மும்பை சி.ஹெச். அப்துர் ரஹ் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஸ்ஸாமிற்கு ராணுவத்தை அனுப்ப தாமதமே கலவரம் தீவிரமாக காரணம்
சுமார் 50 ஆயிரம் குடும்பங் களைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 278 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். 4 மாவட்டங்கள் கடு மையான பாதிக்கப்பட்டுள் ளன.
கலவரம் ஏற்பட்ட உடனேயே ராணுவம் அனுப்பப்பட்டிருக்கு மேயானால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக் காது. இப்போது மத்திய அரசும் - மாநில அரசும் நிவாரணப் பணி களை முடுக்கி விட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிவாரணப் பணி
அசாமிகளுக்கும், வங்காளி களுக்கும் இடையில் சுமூக உறவை உருவாக்குவது என்பது மிகப் பெரிய பணி. எனவே, வட் டார அளவில் அமைக்கப்பட் டுள்ள குழுக்களோடு தொடர்பு கொண்டு முழுஅள வில் நிவாரணப் பணி செய்வதே இப்போதைய தலையாய கடமை என்பதை உணர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப் பணியை மேற்கொள்ள முடிவு செய்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில அமைப்பின் அனுசரணையோடு இப் பணி முடுக்கி விடப்பட்டு, புனித ரமளான் மாதம் என்பதால் இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணப்பணிகளை நிறைவு படுத்துவது என்ற இக் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.
இ.அஹமது பேட்டி
முன்னதாக செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த தேசியத் தலைவர் இ.அஹமது கூறிய தாவது-
அஸ்ஸாமில் சமீபத்தில் நடை பெற்ற வன்முறைகள் மிகுந்த வருத்தத்தை அளிக் கிறது. மத்திய மாநில அரசு களின் உறு தியான நடவ டிக்கை காரணமாக விரைவில் சகஜ நிலை திரும்பிக் கொண்டிருக் கிறது.
அஸ்ஸாமில் நடைபெற்ற நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமா னவை. மிகவும் கவலையளிக் கக்கூடிய விஷயமும்கூட. கல வரத்தில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். கோக் ரஜார் போன்ற பகுதியி லிருந்து ஏராளமான மக்கள் புலம் பெயர்ந் துள்ளனர். சிறுபான்மை சமுதா யத்தினர் உள்ளிட்ட பாதிக்கப் பட்ட அனைவரின் உயிர் உடமை ஆகியவற்றை பாதுகாக்க மாநில அரசு அதி காரிகள் உறு தியான நடவ டிக்கை எடுப்பார் கள் என நான் நம்புகிறேன்.
கலவரம் பற்றி தகவல் கிடைத்ததும் மத்திய உள் துறை அமைச்சர ப. சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினேன். மத்திய அரசு நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக வும், மாமூல் நிலையை கொண்டு வர மாநில அரசு மேற் கொண்டிருக்கும் நடவடிக்கை களை மத்திய அரசு உறுதுணை யுடன் இருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
கோக்ரஜார் பகுதியில் முஸ்லிம்கள் அடிக்கடி தாக்கப் படுவது கவலை தரக் கூடிய ஒரு விஷயம். கலவரம் தொடர் பாக அஸ்ஸாம் முதலமைச்சர் தரூண் கோகேயை தொடர்பு கொண்டு பேசினேன். சகஜ நிலையை ஏற்படுத்த அனைத்து நடவடிக் கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும் என அவர் உறுதியளித்தார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக் கள் பாதுகாப் பான முகாம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டி ருப்பதாகவும் அஸ்ஸாம் முதல்வர் தெரிவித்தார்.
இவ்வாறு இ. அஹமது குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக