Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 17 ஜூலை, 2012

தெலுங்கான பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டும் மம்தா !

மேற்கு வங்கத்தில் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. 

இந்நிலையில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றதும், டார்ஜிலிங் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கூர்க்கா பகுதிகளையும் இணைத்து கூர்காலாந்து பிராந்திய நிர்வாக கவுன்சில் அமைக்கலாம் என யோசனை தெரிவித்தார். இந்த யோசனையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி கூர்காலாந்து பிராந்திய கவுன்சில் நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அடுத்த மாதம் 4ம் தேதி பொறுப்பேற்க உள்ளனர். 

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். மேலும் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி மாநில ஆளுநர் எம்.கே.நாராயணனையும் அவரை கேட்டுக்கொண்டுள்ளார். 

பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, கூர்காலாந்து பிராந்திய கவுன்சில் ஒப்பந்தப்படி புதிய டார்ஜிலிங் ஹில் கவுன்சில் அலுவலகத்தில் இந்த பிராந்திய அலுவலகம் செயல்படும் என்றும் மம்தா கூறினார்.  மேலும் அடுத்த மாதம் பதவியேற்க உள்ள பிராந்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை மம்தா தெரிவித்துள்ளார். 

கூர்காலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.


 மொத்தம் உள்ள 45 இடங்களில் 28 இடங்களில் ஜன்முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூர்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கு மதிப்பளித்து ,மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த நடவடிக்கை போன்று ,ஆந்திர முதல்வர் தெலுங்கான பிரச்சினையை தீர்க்க வழிவகை காண வேண்டும் .இதுவே ,ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ணமாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக