சில்க்(பட்டு) தொழில்நுட்பம் என்பது, பட்டு உற்பத்தியைப் பற்றி படிப்பதாகும் மற்றும் இத்துறை டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறையின் கீழ் வருகிறது.
பட்டுப் புழுக்கள் மற்றும் ரசாயன பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலமாக, பட்டு உற்பத்தி செய்யப்படுவதன் வழிமுறைகள் குறித்து இப்படிப்பு கற்றுத் தருகிறது.
பட்டு என்பது ஒரு இயற்கையான இழையாகும். உலகத்தின் பழைய இயற்கை இழைகளுள் பட்டும் ஒன்றாகும். பிற இழைகளைவிட, இதற்கான முக்கியத்துவம் கூடுதலானது. முந்தைய காலங்களில், பட்டு உற்பத்தி செய்ய, பட்டுப் புழுக்கள் மட்டுமே, ஒரே ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன.
ஆனால், பிற்காலங்களில், பல்வேறான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிக் காரணமாக, பட்டுத் தயாரிப்பில் புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக, செயற்கை பட்டு இழைகள் உற்பத்தியும் தொடங்கியது.
பட்டு இழைகளுக்கு அதிகரித்திருக்கும் தேவை காரணமாக, இந்திய அரசு, சில்க் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ற படிப்பை தொடங்கியுள்ளது. பல கல்லூரிகளில் இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பின் நோக்கம், எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் பட்டு சந்தையை திறமையாக நிர்வகிக்கும் வகையில் நிபுணர்களை உருவாக்குவதேயாகும்.
தகுதிதங்களின் பள்ளி மேல்நிலைப் படிப்பை, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வகையில் படித்து நிறைவுசெய்துள்ள மாணவர்கள், இப்படிப்பில் சேர்வதற்கு தகுதியுடையவர்கள்.
பட்டு தொழில்நுட்பத்தின் பாடங்கள்Fiber Science
Yarn manufacture, yarn structure and properties
Fabric manufacture and fabric structure
Textile testing Dyeing
வாய்ப்புகள்பட்டு தொழில்நுட்பத்தில் ஒருவர் தனது பி.டெக்., படிப்பை நிறைவுசெய்த பின்னர், பணிக்கு செல்லலாம் அல்லது அதே துறையில் எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்புகளை மேற்கொள்ளலாம்.
இத்துறையில், பி.டெக்., முடித்த ஒரு இளநிலைப் பட்டதாரிக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. அவை,* கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்
* தொழில்நுட்ப விற்பனை பிரதிநிதி
* மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியர்
* ஆபரேஷன்ஸ் பயிற்சி பெறுபவர்
* தொழில்நுட்ப நிபுணர்
* செயல்பாட்டு பொறியாளர்
* ஆராய்ச்சியாளர்
இத்துறையில் பணி வாய்ப்புகளை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள்மைசூர் சில்க் பேக்டரி
சில்க் மார்க்
கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ்
பாம்பே டையிங்
அரவிந்த் மில்ஸ் லிமிடெட்
ஜே.சி.டி. லிமிடெட்
லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ்
லக்ஷ்மி மில்.